ஓபிஎஸ், டி.டி.வி-ஐ சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், “1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன் நான்.
அதிமுக கட்சிக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். அம்மா மறைவுக்குப் பிறகு இயக்கத்தை வழிநடுத்த சசிகலா அழைத்து என்னை பேசினார். அதற்குப் பிறகு, இபிஎஸ்-க்காக நான் பரிந்துரை செய்தேன். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அப்போது சொன்னேன்” என்றார்.
