ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நந்தம் அருகே நடந்த இந்த விபத்தில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. அதிலிருந்த டிரைவர், பள்ளி மாணவ மாணவியர் உட்பட 11 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னாள் சென்ற ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
