கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா..! ரூ.1.87 லட்சத்திற்கு அமேசானில் போன் ஆர்டர் செய்த நபர்… திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி…!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கிவிடுகிறார்கள். இதில் ஒருசிலர் ஏமாந்தும் விடுகிறார்கள். அந்தவகையில் பெங்களூருவை சேர்ந்தவர் பிரேமானந்த். இவர் ரூ.1.87 லட்சம் மதிப்புள்ள “சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 7” என்ற போனை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆசையாக பிரித்து பார்த்த பார்சலுக்குள் ‘டைல்ஸ் கல்’ இருந்துள்ளது.

இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அமேசான் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.1.87 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  ஆன்லைனில் ஆர்டர் செய்யும்பொழுது அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.