பிரதமர் மோடி பேசியது அண்ட புளுகு, ஆகாச புளுகு… கடுமையாக சாடிய திருமா..!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் உள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒரு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக, எப்படி இப்படியான ஒரு அண்ட புளுகு ஆகாச புளுகை பேசுகிறார் என்று தெரியவில்லை என  விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பீகார் மக்களை அச்சுறுத்துவதாக பேசிய பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர், இது ஆபத்தான அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். பீகாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த அரசியலை செய்வதாக அவர் சாடியுள்ளார்.