“பணம் வேண்டாம் சார்….” எனக்கு வேண்டியது…? 17 குழந்தைகளை பிடித்து வைத்து போக்கு காட்டிய நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2025

Spread the love

மும்பையின் பவரி பகுதியில் ஒருவர் 17 குழந்தைகளை பிடித்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் 1:45 மணிக்கு ரோஹித் ஆர்யா என்ற நபர் 17 குழந்தைகளை கடத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் குற்றவாளியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ரோஹித் ஆர்யா பேசும்போது, தற்கொலை செய்து இறப்பதற்கு பதிலாக நான் ஒரு திட்டத்தை தீட்டி சில குழந்தைகளை பிணை செய்திகளாக வைத்துள்ளேன்.

எனது கோரிக்கையை எளிமையானது என சில கோரிக்கைகளை கூறினார். மேலும் போலீசார் சிறிய தவறு செய்தாலும் அந்த இடத்திற்கு தீ வைத்து விட்டு நானும் இறந்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் எனக்கு பணம் தேவையில்லை. நான் பயங்கரவாதியும் இல்லை என ரோஹித் கூறியுள்ளார். அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போலீசார் குளியலறை வழியாக வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து குழந்தைகளை பத்திரமாக மீட்டு ரோஹித் ஆர்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.