புதுவையில் மின்கட்டணம் திடீரென்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக மின்கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2.70 ஆக இருந்த மின் கட்டணம் தற்போது 2.90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
101 முதல் 200 யூனிட் வரை 3.25 ரூபாயிலிருந்து நான்கு ரூபாயாகவும், 201 முதல் 300 யூனிட் வரை 5.40 ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாகவும், 300 யூனிட்டுக்கு மேல் 6.80 ரூபாயிலிருந்து 7.50 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. திடீர் மின்கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் மின் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
