தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அயோத்தியபட்டணம் பகுதியைச் சேர்ந்த தேமுதிக சுமார் 50 பேர் கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர் . கட்சியுடன் இணைந்து அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
