தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்குள் இலவச லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்க HP, Dell, Acer ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. லேப்டாப் விநியோகத் திட்டத்தை தொடங்குவது குறித்து துணை முதல்வர் உதயநிதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
