பெங்களூரு கோனனகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் பிரதிநிதி தர்ஷன். இவர் தனது நண்பர் வருண் என்பவருடன் கடந்த 25-ஆம் தேதி பைக்கில் சென்றார். அவர்களது பைக் மீது கார் மோதி விபத்தில் தர்ஷன் உயிரிழந்தார். வருண் படுகாயம் அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு கார் வேண்டுமென்றே பைக் மீது மோதிய காட்சிகள் பதிவாகி இருந்தது. கார் நம்பரை வைத்து விசாரித்ததில் ஜிம் பயிற்சியாளர் மனோஜ் குமார் அவரது மனைவி ஆர்த்தி சர்மா ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
25ஆம் தேதி இரவு வெளியே சென்று விட்டு மனோஜ் குமார் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தர்ஷன் ஓட்டி என்ற பைக் கார் கண்ணாடி மீது உரசியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த மனோஜ் குமார் 2 கி.மீ தூரம் அந்த பைக்கை விரட்டி சென்று பைக் மீது மோதினார். சிறிது நேரம் கழித்து அங்கு சென்ற மனோஜ் குமாரும் ஆர்த்தி சர்மாவும் உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுத்துச் சென்று ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் மனோஜ் குமார் ஆர்த்தி சர்மா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்m
