பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழகத்திலிருந்து சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார் . இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு பைசன் பட குழு சார்பாக 5 லட்சத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் வழங்கியுள்ளார் .மேலும் கண்ணகி நகர் கபடி குழுவிற்கும் 5 லட்சத்தை படக் குழு சார்பாக வழங்கியுள்ளார்.
