சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச்செயலாளர் ஆனந்துக்கு தகவல் கிடைத்ததும் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார். விஜய்க்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
