“என்னால முடியல, திருமணமாகி 10 நாள் கூட சந்தோசமா இல்ல”… வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த அசுடோஸ் கோஸ்வாமி என்பவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு கோஸ்வாமி தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை அவதூறாக பேசி மனதளவில் காயப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மனிஷா தன்னுடைய கணவரும் அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த வீடியோவில், திருமணம் ஆகி பத்து நாட்கள் கூட சந்தோசமாக இருக்கவில்லை என்று வேதனையுடன் மனிஷா தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவரின் குடும்பத்தினரின் வரதட்சணை உள்ளிட்ட பல காரணங்களால் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மனுஷாவின் தந்தை அழைத்த புகாரை தொடர்ந்த போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மனுஷா பதிவு செய்துள்ள வீடியோவில் அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.