BREAKING: அதிமுகவில் அடுத்த பரபரப்பு… சற்றுமுன் முடிவை அறிவித்த செங்கோட்டையன்…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

கட்சியிலிருந்து தன்னை நீக்கினால் மகிழ்ச்சி என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். முன்னதாக இன்று பசும்பொன்னில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசி இருந்தார். இது தொடர்பாக பேசிய இபிஎஸ், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கூறியிருந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் இந்த பதிலை அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் என செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு கெடு விதித்ததால் அவரை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டிருந்தார். தற்போது இபிஎஸ்-க்கு எதிராக உள்ள அணியில் செங்கோட்டையன் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.