திடீர் பரபரப்பு…. அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர முயற்சித்து வருகிறார். ஆனால் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். சமீபத்தில் கூட செங்கோட்டையன் கூறி இருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைந்தது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி ஆகியோரின் சந்திப்பு திட்டமிட்டது என்று இபிஎஸ் கூறியுள்ளார். அவர்கள் திமுகவின் B டீம் என விமர்சித்துள்ள அவர், செங்கோட்டை அணை கட்சியிலிருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. அதிமுகவில் இருந்த சில துரோகிகளால் தான் 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியவில்லை என்ற இபிஎஸ் அந்தியூரில் அதிமுகவின் தோல்விக்கு செங்கோட்டையனும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.