இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஏராளமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே தங்களுக்கு வரும் போலி கால்களை யார் என்று மக்கள் truecaller மூலமாக அறிந்து கொள்கின்றனர். செல்போன் பயனர்களுக்கு SPAM மற்றும் மோசடி அழைப்புகள் பெரிய தொல்லையாகவே உள்ளது.
யார் அழைக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு ட்ரூ காலர் போன்ற செயல்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இனி அதன் தேவை இருக்காது. காரணம் TRAI மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாக SAVE செய்யாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சிம் பதிவு செய்யப்பட்ட பெயர் திரையில் காண்பிக்கப்படும். இதன் மூலமாக நீங்கள் எளிதில் அடையாளம் காண முடியும்.
