அடுத்த பரபரப்பு… ஒன்றாக இணைந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன்… இபிஎஸ்-க்கு அடி மேல் அடி…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் அரசியல் களம் பரபரப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பசும்பொன் நினைவிடத்தில் தேவருக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து மரியாதை செய்தனர். குறிப்பாக மூன்று பேரும் ஒன்றாக இணைந்து விட்டோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் மூன்று விதமான மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு ஒன்றாக இணைந்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். இன்னும் சற்று நேரத்தில் மூன்று பேரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில் இவர்களுடைய இந்த புதிய இணைப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.