அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். ஆனால் இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி செவிசாய்க்காமல் அவர் வேலையை செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் தான் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்தும் நீக்கினார் எடப்பாடி.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செங்கோட்டையன் இன்று பசும்பொன் செல்கிறார். ஏற்கனவே செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன், எடப்பாடி இடையேயான மோதல் போக்கு முற்றியுள்ளது. தற்போது கொங்கு மண்டல தலைவரும், பாண்டிய நாட்டு தலைவரும் ஒன்றிணைந்துள்ளது அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
