உடல் எடை குறைப்பு முதல், அல்சர், இதய ஆரோக்கியம் வரை… தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் போதும்… பலரும் அறியாத வியக்க வைக்கும் மருத்துவ பலன்…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

நம்முடைய உடலுக்கு பலவிதமான சத்துக்கள் மற்றும் தாதுக்களை வழங்கக்கூடிய தேனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே தேனியில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாக மருத்துவ பலனை அதிகம் தருகின்றது. தொண்டை வலி மற்றும் இருமல் மட்டுமல்லாமல் தீக்காயங்களை அகற்றுவதற்கும் இதை ஆரோக்கியத்திற்கும் தேன் மிகவும் நல்லது.

அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதுடன் அதீத பலமும் உங்களுக்கு கிடைக்கும். மிக அழகான தோற்றமும் பெறுவீர்கள். தினம்தோறும் காலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் வரும். தேநீர் அல்லது காபி குடிக்கும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிக்கலாம்.

   

சாப்பிட்ட பிறகு தேன் எடுத்துக் கொள்வதை விட வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவது சிறந்ததாகும். வெறும் வயிற்றில் தேன் எடுத்துக் கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்தவும். அதுமட்டுமல்லாமல் நச்சுக்களை நீக்குவதற்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்ட தேனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.