தமிழகத்தில் பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதில் பொங்கல் சிறப்பு பொருட்கள் மற்றும் வேஷ்டி சேலை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026 பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பத்தாயிரம் கோடி வரை செலவாகும் என்பதால் நிதி ஆதாரத்தை தயார் செய்யும் நடவடிக்கையில் நிதித்துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனுடைய உள்ளனர்.
