குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

தமிழகத்தில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைவில் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2025-26 ஆம் கல்வி ஆண்டில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அவோன் மற்றும் ஹீரோ சைக்கிள் நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சைக்கிள்களை விநியோகிக்க தொடங்க வேண்டும். சைக்கிள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கி வைத்த பிறகு அந்தந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

மூன்று ஆண்டு உத்திரவாத அட்டை வழங்குவதை உறுதி செய்யவும். சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தது மூன்று நாட்களுக்கு பழுது நீக்குவதற்கான சிறப்பு முகாம் நிறுவனத்தால் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.