தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பணிகளை தொடங்கியுள்ள விஜய் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூருக்கு விஜய் தாமதமாக செல்ல காவல்துறை தான் காரணம் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார். போக்குவரத்தை போலீசார் சரியாக சீர் செய்து கொடுத்திருந்தால் விஜய் சரியானத்தில் கரூர் சென்று இருப்பார் எனவும் கூறியுள்ளார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் கட்சியை முடக்க முயற்சி நடப்பதாகவும் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ள கட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
