தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் களமிறங்க நடிகை கௌதமி காய் நகர்த்தி வருகிறார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கௌதமி தற்போது கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார். வரும் தேர்தலில் மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் ஆயிரம் விளக்கு இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வேட்பாளரை போல் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
