பெண்களின் நிர்வாண படங்கள்… காதலன் செய்த வேலை… நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

வடக்கு டெல்லி திமார்பூர் பகுதியை சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) என்பவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆறாம் தேதி தீயில் கருகிய நிலையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அங்குள்ள அறையில் சோதனை செய்தபோது அவருடைய ஹார்ட் டிஸ்கில் 15 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ராம் கேஷ் மீனா தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

அப்போது இளம் பெண் ஒருவர் அங்கு வந்து சென்றதற்கான தடயம் சிக்கியது. பிறகு அந்த நபருடன் அம்ரிதா என்ற காதலி லிவிங் பார்ட்னராக வசித்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது முன்னாள் காதலன் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோருடன் சேர்ந்து ராம் கேஷ் மீனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிறகு விபத்து போல் காட்ட தீ வைத்ததாகவும் கூறியுள்ளார். காதலரின் போனில் நிர்வாண படங்களும் சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்ததால் அம்ரிதா அவர்களுடைய படங்களை அழிக்க வலியுறுத்தியும் அவர் அழிக்காததால் அவரை கொன்றதாக கூறியுள்ளார்.

   

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். ராம் கேஷ் மீனா பெண்களின் நிர்வாண படங்களை ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்துள்ளார். இதுவே அவருடைய கொலைக்கு காரணமாக இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.