ஹரியானா மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 7 மணிக்கு செக்டார் 18 சந்தைக்கு அந்த சிறுமி சென்றுள்ளார். அவர் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சிறுமி வீட்டிற்கு வந்தார். அவரிடம் விசாரித்த போது 4 பேர் தன்னை காரில் கடத்தி சென்று போதை பொருள் கொடுத்து ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் மறுநாள் காலை அதே காரில் சிறுமியை வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
