கரூரில் நடந்த TVK பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் ஹோட்டலில் வைத்து விஜய் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களின் காலைல விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ளதால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
திமுக அரசை விளாசி சூடான அறிக்கை, கட்சியில் நிர்வாகக் குழு அமைப்பு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளிட்டதோடு, இன்று காலை 10 மணிக்கு 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுக் கூட்டமானது பனையூர் TVK அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில் அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் பெயர் இடம் பெறாதது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
