பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கிறது. பெண்களின் கருவை பலமடைய செய்வதன் கருச்சிதைப்பு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைகளுக்கான இயற்கை முறை தீர்வாக உள்ளது மற்றும் ஆரோக்கியமான வழியில் எடை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் சிற்றுண்டியாக சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாள்பட்ட நோய்களின் ஆபத்து காரணிகளை குறைக்கிறது .இவை பல ஊட்டச்சத்துக்களின் சக்தி வாய்ந்த ஆதாரம். இது ஒரு சிறிய விதையில் அதிக அளவு அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. அவற்றில் அதிகமான கலோரிகள் உள்ளன. எனவே ஆரோக்கியமான எடையை நிர்வகிக்க உதவுகிறது. உணவில் ஒரு கைப்பிடியை சேர்த்துக் கொண்டால் பூசணி விதைகளில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. மார்பக மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. இதய நோய் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
