தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள். ஆனால் விண்ணப்பிக்கும் போது நில ஆவண விவரங்கள் கேட்கப்பட்டிருக்காது. இதனால் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா என பலருக்கும் கேள்வி வந்துள்ளது. அவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி ஆனவர்களுக்கு நவம்பர் மாதத்தில் அரசிடமிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.
