BREAKING: தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் எடுத்த திடீர் முடிவு….!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம் விஜய்க்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்த இருந்தாலும் அதனை சட்டரீதியாக கையாண்டு தனது கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். தான் செய்ய உள்ள மாற்றங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற அடுத்த வாரம் அவசர பொதுக்குழுவை கூட்டுகின்றார். இது சென்னை அல்லது மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.