சூப்பர் ஐடியா…! மெட்ரோ ரயில்களில் “ஆன்ட்டி ட்ராக்”… இந்த பாதுகாப்பு அம்சத்தின் செயல்பாடு என்ன தெரியுமா…?

By Devi Ramu on ஐப்பசி 28, 2025

Spread the love

மெட்ரோ ரயில்கள் ரயில் நிலையங்களில் கதவுகள் மூடும் போது அவற்றிற்கு தடையாக உள்ள பொருட்களை அடையாளம் காணும் தடை கண்டறிதல் அமைப்புடன் கூடிய தானியங்கி சரக்கு கதவுகளை கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம் 52 மெட்ரோ ரயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் “ஆன்டி ட்ராக்” பாதுகாப்பு அம்சத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. அனைத்து கதவுகளிலும் “ஆன்டி ட்ராக்” அம்சத்தை வடிவமைத்தல், வழங்குதல், நிறுவுதல், சோதித்தல், செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒப்பந்தத்தை சி.எம்.ஆர்.எல் கையெழுத்திட்ள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் சேர்த்து அதன் மொத்த மதிப்பு 48.33 கோடி ரூபாய். பயணிகள் ஏறும் போதோ அல்லது இறங்கும்போதோ கதவுகளுக்கு இடையில் சேலைகள், பைபட்டைகள், பெல்ட் ஆகியவை சிக்கிக்கொண்டால் இந்த கருவி கண்டறியும். மெட்ரோ ரயில் நகரும்போது சிக்கிய பொருள் இழுக்கப்பட்டால் இந்த அமைப்பு கண்டறிந்து உடனே அவசரகால பிரேக் செயல்பட்டு மெட்ரோ ரயில் நிறுத்தப்படும்.