மோன்தா புயல் எதிரொலி: இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை..? வெளியானது லிஸ்ட்..!!

By Soundarya on ஐப்பசி 28, 2025

Spread the love

தற்போது மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயலானது வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.