“ப்ளீஸ் என்ன விட்ருங்க”…. மருத்துவமனை கழிவறையில் பெண் நோயாளியை கதற கதற… துப்புரவு ஊழியர் செய்ய கொடூரம்… உ.பி.யில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் பெண் நோயாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னுடைய மைத்துனருக்கு உதவியாக வந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு அருகில் மதுவாங்கி குடித்து மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மயக்கம் தெளிந்த அந்தப் பெண் தன்னை தன்னுடைய மைத்துனர் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துப்புரவு ஊழியர் ஜெய்சங்கர் என்பவரிடம் கேட்டுள்ளார். அவர் அந்தப் பெண்ணுக்கு உதவுவது போல நடித்து மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த துப்புரவு ஊழியரை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.