புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது. Montha புயல் இன்று தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
