வங்க கடலில் உருவாகியுள்ள Montha புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இந்நிலையில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 17 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காக்கிநாடா அருகே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்க இருப்பதால் ஆந்திரா, ஒடிசா மற்றும் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
