பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார்… ஆனால் பனையூர் பஞ்சாயத்து… விஜய்யை அட்டாக் செய்த சீமான்..!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

கரூரிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 குடும்பத்தினர் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தற்போது, ரிசார்ட்டிற்கு வருகை தந்துள்ள தலைவர் விஜய், காலை 10 மணியளவில் ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்துள்ள விஜய், தேர்தலின்போதும் வாக்குப்பெட்டியை பனையூரில் வைத்து, அங்கு வந்து வாக்களிக்க சொல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார், ஆனால் பனையூர் பஞ்சாயத்து என் (விஜய்) வீட்டில் தான், ஆலமரத்துக்கெல்லாம் வர மாட்டேன் , இது நாட்டாமையை தாண்டிய நாட்டாமையாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.