TVK-வில் அதிரடி மாற்றம்… வெளியேறும் புஸ்ஸிஆனந்த்… பொதுச்செயலாளராகும் ஆதவ் அர்ஜுனா..? விஜய் எடுத்த முடிவு..!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் TVK  பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி மாநில தலைவராக நியமிக்க இருப்பதாகவும், மேலும் செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.  கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவர விஜய் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் தவெக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.