திமுகவுடன் கூட்டணி?… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ராமதாஸ்… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட் செய்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கட்சியின் புதிய செயல் தலைவராக தன்னுடைய மூத்த மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்தார்.

இந்நிலையில் பாமகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவரிடம், யாருடன் கூட்டணி என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், கூட்டணி குறித்து அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு போகப்போக தெரியும் என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.