அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவனின் கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா வட கரோலினா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியை சந்திர பிரபா சிங்(44) தனது கணவர் அரவிந்த் சிங் உடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திர பிரபா தன்னுடைய கணவரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் சந்திர பிரபாவை கைது செய்துள்ளனர். அவர் போலீஸாரிடம் கூறுகையில், காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். என் கையில் கத்தியுடன் திரும்பிய போது தற்செயலாக என் கணவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டு விட்டது என்று அவர் கூறியுள்ளார். இருந்தாலும் அரவிந்த் தனது மனைவி வேண்டுமென்று தன்னை குத்தியதாக குற்றம் சாட்டை உள்ள நிலையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
