தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கன மழை மற்றும் லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 183.19 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
