தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் தலைமையில் ஆட்சியை அமைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் 20ஆம் தேதி புதிய கட்சி தொடங்கும் மல்லை சத்யா, திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், அந்த கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
