போடு ரகிட ரகிட… சைலண்டாகவே இருந்து பெரிய சம்பவம் செய்த விஜய்… செம ஷாக்கில் அதிமுக, திமுக…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

இதனிடையே கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தால் விஜய் அரசியலில் இருந்து விலகலாம் என்று செய்தி பரவிய நிலையில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டாலும் அங்கீகரிக்கப்படாத கட்சி என தெரிவிக்கப்பட்டது. இதே தகவல் அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழக வெற்றிக்கழகம் தனது கட்சிக்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை பெறுவதில் வேகம் எடுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நவம்பர் 11 முதல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் விஜய் இளைஞர் மற்றும் பெண்களை கவரும் சின்னங்கள் மீது கவனம் செலுத்தி 5 விருப்ப சின்னங்களை தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் 184 பொதுச்சின்னங்களை பட்டியலிட்டு வழங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் ஐந்து முதல் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி நேரத்தில் கேட்கும் சின்னம் கிடைக்காது என்பதால் பனையூர் அலுவலகம் விரைவாகவே விண்ணப்பத்திற்கான பணிகளில் உள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சி மற்றும் விஜயின் செயலில் மந்த படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் தற்போது தேர்தல் சின்னத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தமிழக வெற்றிக்கழகம் வேகத்தை உறுதிப்படுத்தி உள்ளது. அடுத்த கட்ட அரசியல் முன்னேற்றத்தை காத்திருக்கும் ஆதரவாளர்கள் இதனை வரவேற்கின்றனர்.