ஸ்டாலினுக்கு நாள் குறிச்சாச்சு…. திமுகவின் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது… நயினார் விளாசல்…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் தலைமையில் ஆட்சியை அமைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சி காலம் முடிவடைவதற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று மட்டும் சொல்லும் திமுக மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்று தேர்தல் பரப்புரையின் போது பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.