மனசே பதறுது..! போதைக்கு அடிமையான தம்பதி… தங்கள் 6 மாத குழந்தையை விற்று… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

By Soundarya on ஐப்பசி 25, 2025

Spread the love

பஞ்சாப் மாநிலத்தில் தம்பதிகள் போதை பொருட்கள் வாங்குவதற்காகத் தங்கள் 6 மாத குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைக்கு அடிமையான அந்த தம்பதியினருக்கு 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் வாங்க காசு இல்லாததால் குழந்தையை ஒரு ஸ்கிராப் வியாபாரிக்கு ரூ.1.8 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.

இது குறித்து அந்த குழந்தையின் அத்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், குழந்தையை விற்ற அந்த தம்பதியையும், அந்த குழந்தையை வாங்கிய அந்த வியாபாரியையும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.