தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தனது கட்சிக்கான சின்னத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மக்கள் மனதில் எளிதில் பதியும் சின்னங்களை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
அதன்படி கப்பல், விசில், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை கேட்டு விண்ணப்பிக்க விஜய் முடிவு செய்திருக்கிறாராம். இதில், விசில் சின்னத்தின் மீது விஜய்க்கு அதிக ஆர்வம் இருப்பதாக சொல்லப்படுகிறது . இதற்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
