கரூர் துயரத்தால் தவெகவின் செயல்பாடுகள் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார். விஜய் மீண்டும் எப்போது களத்திற்கு வருவார் என ஆவலுடன் தவெகவினர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள.
நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். வரும் 27-ஆம் தேதி கரூர் துயரத்தில் பலியான மக்களை சந்தித்த பிறகு கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
