தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த முறை ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி கே வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி கே வாசன் தலைமையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
