நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து…. அடுத்தடுத்து 4 பேர் துடிதுடித்து மரணம்… அதிகாலையிலையே சோகம்…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

கோவையில் நள்ளிரவில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் சரக்கு குடித்துவிட்டு நல்ல போதையில் இளைஞர்கள் அதிவேகமாக காரில் சென்றுள்ளனர். அதில் கார் கட்டுப்பாட்டு இழந்து மரத்தில் மோதியதில் அடுத்தடுத்து நான்கு பேர் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும், விபத்தில் நண்பர்களான பிரகாஷ், ஹரிஷ், சபரி, அகத்தியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனைவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.