ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றது. இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் வரை இருப்பார். இந்நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் ராகு மகர ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். ராகு மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் செல்வதற்கான வாய்ப்பு அதிகம். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். அலுவலகங்களில் பதவி உயர்வு கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் நீங்கள் புதிய உச்சத்தை அடைவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நல்ல வேலை வாய்ப்புகள் வந்து சேரும். தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அறிவுசார் திறன்களில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு தெளிவுடன் சவால்களை எதிர்கொள்வார்கள். சுயமரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். எதிர்பாராத பெரிய லாபம் கிடைக்கும். வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் அதிகம். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணியாற்றும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனான உறவு வலுப்பெறும். வேலை அல்லது வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.
