இவர்களைத் தவிர விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… தமிழக அரசு குட் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

   

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேர சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதி உள்ள பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நடவடிக்கையால் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைய உள்ளன. பெரும்பாலும் விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும் என தெரிகிறது.