கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கு அண்ணாமலை விமர்சனம் செய்தது முக்கிய காரணமாக கூறப்பட்டது. அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக பெற்ற வாக்குகளை கூட்டணியாக பெற்றிருந்தால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சுமார் 25 தொகுதிகள் கிடைத்திருக்கும் என பரவலாக பேசப்பட்டது.
மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக கூறியதால் அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அண்ணாமலை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலை தனது தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. சாணி அழுவது மாடுகளுக்கு உணவளிப்பது உள்ளிட்ட காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.
