உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். அந்த நபர் ஹரியானாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தொழிலாளி குட்டு என்பவருடன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக தகராறு செய்துள்ளார். கடந்த ஆறாம் தேதி தேவி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனதால் அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தேவியை தேடி வந்தனர். இதற்கிடையே தேவியின் சகோதரர் வீட்டிற்கு சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் புதிதாக ஒரு குழி தோண்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழியை தோண்டி பார்த்தபோது தேவியின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தொழிலாளியை பிடித்து விசாரித்த போது குட்டு என்பவருடன் தனது மனைவி தகாத உறவில் இருந்ததால் அவரை கொலை செய்து புதைத்ததாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
